வணிகம்

ஐபிஓ வெளியிடுகிறது எம்இபி இன்ப்ரா

செய்திப்பிரிவு

எம்இபி இன்ப்ராஸ்ட்ரெக்ஸர் அண்ட் டெவலப்பர்ஸ் நிறுவனம் ஐபிஓ வெளியிடுகிறது. இதற்கான அனுமதியை செபி வழங்கியுள்ளது. இதன் மூலம் ரூ.360 கோடி மூலதனத்தை திரட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த இந்த நிறுவனம் ஐபிஓ வெளியிட செப்டம்பர் மாதம் செபியிடம் விண்ணப்பம் செய்திருந்தது. இதற்கான அனுமதியை செபி தற்போது வழங்கியுள்ளது.

இந்த பங்கு வெளியீடு மூலம் மூலதனச் சந்தையில் இந்த நிறுவனம் நுழைகிறது. இந்த மூலதன திரட்டலை நிறுவனத்தின் பொதுவான தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளது. ஐடிஎஃப்சி செக்யூரிட்டீஸ், ஐடிபிஐ கேப்பிட்டல் மார்க்கெட் சர்வீசஸ், ஐஎன்ஜிஏ கேப்பிட்டல் போன்ற நிறுவனங்கள் இந்த பங்கு வெளியீட்டை கையாள உள்ளன.

சுங்கச்சாவடி தொழிலை மேற்கொண்டு வரும் இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் தொழிலை மேற்கொண்டுள்ளது. 122 சோதனைச் சாவடிகளை இந்த நிறுவனம் வைத்துள்ளது.

SCROLL FOR NEXT