வணிகம்

தங்கம், வெள்ளியை விட அதிக லாபத்தை கொடுத்த பங்குச்சந்தை

பிடிஐ

தங்கம், வெள்ளியை விட 2014-ம் ஆண்டு பங்குச்சந்தை நல்ல லாபத்தை கொடுத்தது. தொடர்ந்து மூன்றாவது வருடமாக பங்குச்சந்தைகள் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றன. புதிய அரசு பொறுப்பேற்றது, முதலீட்டாளர்களின் மன நிலை மாறியது, அந்நிய முதலீடு அதிகரித்தது ஆகிய காரணங்களால் இந்திய பங்குச்சந்தை நடப்பாண்டில் 30 சதவீதம் உயர்ந்து. 28822 என்ற உச்சபட்ச புள்ளியை நவம்பர்

28-ம் தேதி சென்செக்ஸ் தொட்டது. மாறாக தங்கத்தின் விலை நடப்பாண்டில் 9 சதவீதம் சரிந்தது. அதேபோல வெள்ளியின் விலை நடப்பாண்டில் 15.43 சதவீதம் சரிந்தது. பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தங்கம் தொடர்ந்து மூன்றாவது ஆண் டாக பிரகாசிக்கவில்லை.

பங்குச்சந்தை உயர்வதால், தங்கத்தில் இருக்கும் முதலீட்டை வெளியே எடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்ததாக பங்குச்சந்தை வல்லு நர்கள் தெரிவித்தார்கள். மேலும் 2015-ம் ஆண்டு அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால், டாலருக்கு தேவை அதிகரித்து, தங்கத்தின் விலை மேலும் குறையலாம் என்று ஆனந்த் ரதி கமாடிட்டீஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பிரிதி குப்தா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT