ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஸ்நாப்டீல் மற்றும் இந்தியா போஸ்ட்டுடன் இணைந்து நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் தயாரிப்புகளை விற்பதற்கான தளத்தை அமைத்து கொடுக்கிறது.
பரிட்சார்த்த அடிப்படையில் வாரணாசி அஞ்சல் நிலையத்தில் இந்த மையத்தை ஸ்நாப்டீல் தொடங்கியுள்ளது. உள்ளூர் நெசவாளர்கள் மற்றும் கைவினை ஞர்கள் இந்த மையத்தின் மூலம் தயாரிப்புகளை விற்பனை செய்யலாம். சிறு குறு உற்பத்தியாளர்கள், நெசவாளர்களின் வாழ்வாதாரமும் இதன் மூலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஸ்நாப்டீல் அவர்களுக்கான தளம் அமைத்து கொடுத்துள்ளது என்று நிறுவனர்களில் ஒருவரும் தலைவருமான குணால் பாஹல் தெரிவித்தார்.
நெசவாளர்களின் தயாரிப்புகள் தேசிய அளவில் விற்பனை செய்வதற்கான வாய்ப்பு உருவாகும். நெசவாளர்கள் தங்களது தயாரிப்புகளை அஞ்சல் நிலையத்தில் சேர்த்துவிட்டால் வாங்குபவருக்கு இந்தியா போஸ்ட் டெலிவரி செய்து விடும்.
வேக வேகமக வளர்ந்து வரும் பேஷன் மாற்றங்களால் நமது உயர்வான பாரம்பரியத்தை இழந்து வருகிறோம். இந்த சந்தர்ப்பத்திலாவது செயல்படவில்லை எனில் நாம் நமது அடையாளங்களை இழந்துவிடுவோம். அதற்காகவே இந்த முயற்சி என்று குறிப்பிட்டார்.