தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தில் கட்டிடத் தொழிலாளர்களையும் ஒப்பந்த தொழிலாளர்களையும் உறுப்பினர்களாக சேர்க்க மத்திய தொழிலாளர் வேலைவாய்ப்பு அமைச்சகமும், வருங்கால வைப்புநிதி ஆணையமும் இணைந்து புதிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளன.
இவர்களுக்கு தனி கணக்கு எண் ஒதுக்கப்படும். இதை எப்படி செயல்படுத்துவது என்பதற்கான நடைமுறை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இவர்கள் வைப்பு நிதித் திட்டத்தில் சேர சட்டம் வகைசெய்கிறது. இந்த தகவலை தொழிலாளர் கள் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சகச் செயலாளர் கவுரி குமார் தெரிவித்தார்.
இத்தகைய தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்கள் தற்காலிக அடிப்படையில் வேலையில் இருப்பதால் அவர்களுக்கு வைப்பு நிதி சலுகைகள் கிடைப்பதில்லை என்றும் அவர் கூறினார்.
வைப்புநிதியில் ஒப்பந் தத் தொழிலாளர்களை, கட்டி டத் தொழிலாளர்களை சேர்ப்பதற் கான வழிமுறைகள் இறுதிசெய் யப்படவில்லை. நேராக கட்டு மான நிறுவனங்களை அணுகு வதும் கட்டுமானப்பணி நடக் கும் இடத்துக்குச் சென்று தொழிலாளர்கள் விவரத்தை பெற்று மேல் நடவடிக்கை எடுப்பதும் இந்த சிறப்பு ஏற்பாட்டில் அடங் கும் என்று தொழிலாளர் வைப்பு நிதி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்டோபரில் தனி கணக்கு எண் (யுஎஎன்) ஒதுக்கும் பணி தொடங்கப்பட்டபோது வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அமைத்த இரு துணைக்குழுக்கள், ஒப்பந் தத் தொழிலாளர்கள் மீதும் வைப்பு நிதி நிறுவனம் கவ னம் செலுத்தவேண்டும் என பரிந்துரைத்திருந்தது.