வணிகம்

ரஷிய துணை நிறுவனத்தை விற்க ஐசிஐசிஐ முடிவு

செய்திப்பிரிவு

ஐசிஐசி வங்கி, ரஷியாவில் இருக்கும் தன்னுடைய துணை நிறுவனமான ’ஐசிஐசிஐ பேங்க் யூரேஷியா’-வை விற்க முடிவு செய்திருக்கிறது. இந்த Sovcombank வாங்கப்போகிறது.

ரஷியாவில் இருக்கும் துணை நிறுவனத்தை விற்றாலும் இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் செயல்பாடு இருக்கும். இதர நாடுகளில் இருக்கும் துணை நிறுவனங்கள் மூலம் ரஷிய வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடிவெடுத்திருக்கிறது. துணை நிறுவனத்தை விற்பதற்கு ஐசிஐசிஐ வங்கியின் இயக்குநர் குழு நேற்று ஒப்புதல் வழங்கியது.

செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த ஆறு மாத காலத்தில் 2.8 கோடி ரூபிள் அளவுக்கு ரஷிய துணை நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் இருந்தது.ஐசிஐசிஐ வங்கியில் ரஷிய துணை நிறுவனத்தின் பங்கு 0.1 சதவீதம்தான். நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் இந்த விற்பனை முடியும் என்று ஐசிஐசிஐ வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT