மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வருகிற 26-ம் தேதி மாநில நிதி அமைச்சர்களை சந்திக்க இருக்கிறார். மத்திய பட்ஜெட் அறிவிப்புக்கு முன்னர் மாநில நிதி அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையாக இது இருக்கும் என நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில், பொருளாதார கொள்கைகளின் விளைவுகள், அதன் அழுத்தம், மாநில அரசுகளுடனான ஒத்துழைப்பு போன்றவை விவாதிப்படும் என தெரிகிறது. வருகிற பிப்ரவரி மாதத்திலேயே முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டுமென ஜெட்லி நினைக்கிறார் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். முக்கியமாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான முனைப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே மாநில நிதி அமைச்சர்களுடனான இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.