நாட்டின் நான்காவது பெரிய மென்பொருள் நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜியின் டிசம்பர் காலாண்டு வருமானம் குறையலாம் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் பவுண்ட், யூரோ, ஆஸ்திரேலியா டாலர் உள்ளிட்ட அனைத்து நாணயங்களுக்கு எதிராகவும் அமெரிக்கா டாலர் மதிப்பு பலமடைந்து வருகிறது. இதனால் வருமானம் குறையக்கூடும் என்று முதலீட்டாளர்கள் மற்றும் அனலிஸ்ட்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் ஹெச்.சி.எல்.டெக் தெரிவித்துள்ளது.
அனைத்து நாடுகளில் இருந்தும் எங்களுக்கு பிஸினஸ் இருக்கிறது. அதனால் டாலர் மதிப்பில் வருமானம் குறையும் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது. டிசம்பர் 18-ம் தேதி கரன்ஸி நிலவரங்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்று ஹெச்.சி.எல். தெரிவித்திருக்கிறது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் டாலர் மதிப்பில் 1.9 சதவீத வருமான வளர்ச்சி மட்டுமே இந்த நிறுவனம் அடைந்தது. வர்த்தகத்தின் முடிவில் ஹெச்.சி.எல். பங்கு 3.2 சதவீதம் சரிந்து 1,537 ரூபாயில் முடிவடைந்தது.