சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) சட்டத்தை மாநிலங்கள் அமல்படுத்த ஒரு வருடம் காலம் எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2016 ஏப்ரல் வரை ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்தலாம் எனக் கூறியுள்ளது.
ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்பட்டால் மாநிலங்களின் வரிவருவாய் பாதிக்கும் என தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் குறிப்பிட்டு வந்தன. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறை கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு கூறிவருகிறது.
மாநிலங்களின் வருவாய் இழப்பை ஈடுசெய்ய முதல் இரண்டு வருடங்களுக்கு ஜிஎஸ்டி வரியோடு கூடுதலாக 1% வரியை மாநில அரசு வசூலிக்கலாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த ஓராண்டு காலத்துக்குள் அனைத்து மாநிலங்களிலும் ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.