வணிகம்

ஜனவரி முதல் வாரத்தில் வங்கியாளர்களுடன் மோடி ஆலோசனை

செய்திப்பிரிவு

வரும் ஜனவரி 2 மற்றும் 3ம் தேதி புனேவில் வங்கியாளர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து சீர்திருத்தங்கள் குறித்து இறுதி செய்ய இருக்கிறார்.

இந்த சந்திப்புக்கு ஞான சங்கம் (Gyan Sangam) என்று பெயரிடப்பட்டிருக் கிறது. முக்கியமான சீர்திருத்தங்கள் குறித்து பல முறை விவாதிக்கப் பட்டிருக்கிறது. இருந்தாலும் சீர்திருத்த யோசனைகளுக்கு இறுதி வடிவம் தரும் போது வங்கியாளர்கள் அவசியம் இருக்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா மற்றும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் வங்கித்துறை சீர்த்திருத்தங்கள், வங்கி மற்றும் அரசு தரப்பில் இது வரை நடந்த சரியான செயல்கள், தவறுகள் குறித்து விவாதிப்பது, வங்கிகளை இணைப்பது உள்ளிட்ட விஷயங்கள் இந்த சந்திப்பில் அலசப்படும்.

மேலும் துறை வல்லுநர்களை சந்திக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் விவாதிப்பதற்கு ஆறு தலைப்புகள் முடிவு செய்யப் பட்டிருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளை மறு சீரமைப்பு செய்வது அல்லது இணைப்பது, ரிஸ்க், மனிதவள பிரச்சினைகள், பணியாளர்களின் பயிற்சி மற்றும் மேம்பாடு, சர்வதேச செயல் பாடுகள் மற்றும் நேரடி மானியம், முன்னுரிமை கடன்கள் உள்ளிட்ட மக்கள் நல திட்டங்களில் டெக்னாலஜியை பயன்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் விவாதம் நடை பெறும்.

இந்த விவாதங்களுக்கு பிறகு, சீரமைப்புகளுக்கான முன்வரைவு மற்றும் திட்ட செயல்பாடுகளை ஜனவரி 3-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுவார்.

SCROLL FOR NEXT