பொருளாதார வளர்ச்சியை ஊக்கு விக்க 2,900 கோடி டாலர் ஊக்க நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அனுமதி அளித்தது. மார்ச் 2011-ம் ஆண்டில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பான்மையான தொகை செலவிடப்படும்.
இதனை வேகமாக செயல் படுத்துவன் மூலம், நுகர்வினை அதிகரித்து பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை மூன்றா வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற ஷின்சோ அபே நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக் கிறார்.
கடந்த இரண்டு வருடத்துக்கு முன்பு வர்த்தகத்துக்கு சாதகமாக, நுகர்வினை அதிகரிக்கும் கொள்கைகளை அறிவித்தார். இதற்கு ஜப்பானின் மத்திய வங்கி பெரிதும் தன்னுடைய கடன் மற்றும் நிதிக்கொள்கை மூலம் உதவியது.
எதுவும் செய்யாமல் இருப்ப தற்கு இதையாவது செய்யலாம், ஆனால் இந்த நடவடிக்கைகள் மூலம் எவ்வளவு வளர்ச்சி இருக்க முடியும் என்றும், இதனால் பொருளா தாரத்தில் பெரிய உத்வேகம் இருக் காது என்றும் நொமுரா செக்யூரிட் டீஸ் நிறுவனத்தின் பொருளாதார வல்லுநர் தெரிவித்தார்.