வணிகம்

தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

புதிதாக பொறுப்பேற்கும் மத்திய அரசிடம் முதல் 100 நாட்களில் இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) என்ன எதிர்பார்க்கிறது என்பதை செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது.

புதிதாக அமையும் அமைச்சரவையில் துறைகளுக்கு இடையே ஒரு ஒருங்கிணைப்பு தேவை. இதன் மூலம் இரு அமைச்சரவைகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்க முடியும். பொருளாதார வளர்ச்சியும், முதலீடுகளும் குறைந்துவிட்டது. பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவது முக்கியம். இதன் மூலம் அதிகளவு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று சி.ஐ.ஐ.யின் தலைவர் அஜய் ஸ்ரீராம் தெரிவித்தார்.

பொருளாதார கொள்கைகளை சரியாக வடிவமைத்து செயல் படுத்தும் பட்சத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில் 15 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றார்.

ஜி.எஸ்.டியை கொண்டு வருவது போலவே, வட்டி விகிதத்திலும் 1 சதவீதத்தை குறைக்க வேண்டும் என்றார். மேலும் மானியங்களை இந்திய ஜிடிபியில் 1.7 சதவீதத்துக்குள் வைக்க வேண்டும், தொழிலாளர் கொள்கைகளை சீரமைத்து பெரிய அளவில் உற்பத்தியை எட்ட வேண்டும்.

அதேபோல முதலீடு, தொழில்முனைவு, வியாபாரத் துக்கு தேவையான சூழ்நிலையை புதிதாக அமைய விருக்கும் மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

மேலும் இ-கவர்னன்ஸ், தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை ஊக்குவித்து திட்டங்களுக்கு விரைவில் அனுமதி கொடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT