வணிகம்

மேலும் சில சொத்துகளை விற்க சஹாரா முடிவு

பிடிஐ

திகார் சிறையில் இருக்கும் சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராயை விடுவிப்பதற்காக, நிதி திரட்டும் பணிகளில் சஹாரா குழுமம் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் குர்கானில் இருக் கும் நிலத்தை 1,251 கோடி ரூபாய்க்கு சஹாரா விற்றது. அதனை தொடர்ந்து மும்பை மற்றும் ஜோத்பூரில் இருக்கும் நிலங்களை 1,250 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்தி ருக்கிறது சஹாரா குழுமம். தவிர புனேவில் இருக்கும் இன்னொரு நிறுவனத்தையும் விற்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அனைத்து நிலங்களும் உள்ளூரில் இருக்கும் கட்டு மான நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதாக தெரிகிறது. சஹாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய், முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டிய நிதியை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதியிலிருந்து திகார் சிறையில் இருக்கிறார்.

இந்த நிறுவனம் 93 சதவீத முதலீட்டாளர்களுக்கு அவர்களது பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாக தெரிவிக்கிறது. சஹாரா குழுமம் தனது சொத்துக்களை விற்பதற்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சிறுமுதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டிய 20,000 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தா ததால் கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் திகார் சிறையில் இருக்கிறார் சுப்ரதா ராய்.

ரூ.10,000 கோடியை பிணை யாக செலுத்தினால் மட்டுமே ஜாமீன் கிடைக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதில் 5,000 கோடி ரூபாயை ரொக்கமாகவும், ரூ.5,000 கோடியை வங்கி உத்தர வாதமாகவும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் 3,117 கோடி ரூபாயை செலுத்தி இருக்கிறது சஹாரா.

மேலும் அகமதாபாத் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த 411 கோடி ரூபாயையும் இந்த நிறுவனம் செலுத்தி இருக்கிறது.

SCROLL FOR NEXT