வணிகம்

8 நிறுவனங்களில் எஃப்டிஐ முதலீட்டுக்கு அனுமதி

பிடிஐ

அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி கோரியிருந்த எட்டு நிறுவனங்களுக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. சிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்சஸ் மற்றும் லைஃப் பாசிட்டிவ் நிறுவனம் உள்ளிட்ட எட்டு நிறுவனங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ 34.77 கோடியாகும்.

அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தின் (எப்ஐபிபி) பரிந்துரையின் பேரில் இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த சிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் நிறுவனம் எல்எல்பி க்கான அனுமதி வேண்டி விண்ணப்பம் செய்திருந்தது. இதற்கான திட்ட மதிப்பு ரூ. 30 கோடி.

இதேபோல லைப் பாசிட்டிவ் நிறுவனம் இதற்கு முன்பு 96 சதவீத அந்நிய முதலீட்டைக் கொண்டு இயங்கி வருகிறது. இதற்கான முதலீட்டை வரம்பை 99 சதவீதமாக உயர்த்திக் கொள்ள அனுமதி கோரியிருந்தது. இதன் மதிப்பு 4.61 கோடியாகும்.

மகாநகர் காஸ், மெடிக்காமன் பயோடெக், டூடோர்விஸ்டா குளோபல், வெஞ்சுரா இந்தியா, சிஸ்ஸ்மார்ட் சர்வீசஸ், மஹிந்திரா சிஐஇ ஆட்டோமோட்டிவ் போன்ற நிறுவனங்களும் அனுமதி கோரி விண்ணப்பம் செய்திருந்தன.

அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தின் கூட்டத்தில் லுபின் பார்மா குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும் அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. லுபின் நிறுவனம் தனது அந்நிய நிதி நிறுவன முதலீடு வரம்பை 49 சதவீதமாக வைத்திருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கம்பெனிகள் விவாகாரத்துறை இது குறித்து முடிவுசெய்ய வேண்டும் என மத்திய அமைச்சவை கேட்டுக்கொண்டிருந்தது

எஸ்எம்இ கேபிட்டல் மார்க்கெட் கார்ப்பரேஷன், வேரியன்ட் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட பனிரெண்டு நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும், இரண்டு விண்ணப்பங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT