பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. நேற்று 100 சதவீத இடைக்கால டிவிடெண்ட் அறிவித்தது. இந்த பங்கின் முகமதிப்பு ஐந்து ரூபாய் என்பதால் ஒரு பங்குக்கு டிவிடெண்டாக ஐந்து ரூபாய் வழங்கப்படும்.
டிவிடெண்ட் வழங்குவதற்காக வெள்ளிக்கிழமை இயக்குநர் குழு கூடி முடிவெடுத்தது. டிவிடெண்டாக 4,277.5 கோடி ரூபாய் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்க இருக்கிறது. இதில் அரசாங்கத்தின் பங்கு 2,948.08 கோடி ரூபாய் ஆகும். டிசம்பர் 18-ம் தேதி முதல் முதலீட்டாளர்களுக்கு இடைக்கால டிவிடெண்ட் வழங்கப்படும்.
ஓ.என்.ஜி.சி பங்கு வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் முடிவில் 337 ரூபாயில் முடிவடைந்தது. மேலும் மூன்று இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. கிருஷ்ணா கோதாவரி படுகை, மும்பை கடற்கரை மற்றும் காவிரி படுகை ஆகிய இடங்களில் இந்த வளங்களை ஓ.என்.ஜி.சி. கண்டுபிடித்துள்ளது.