டெல்லியைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான சூப்பர்டெக் நிறுவனம் புதிய தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி இந்நிறுவனம் கட்டிவரும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒன்று வாங்கினால் அதற்குப் பரிசாக ஒரு வீடு இலவசமாக தரப்படும் என அறிவித்துள்ளது.
பொதுவாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் வீடுகளை விற்பனை செய்வதற்காக பல்வேறு சலுகைகளை அறிவிப்பது வழக்கம். சில நிறுவனங்கள் கார்களை பரிசாக அறிவிக்கின்றன. சில நிறுவனங்கள் மாடுலர் கிச்சன், தங்கக் காசு, ஏசி வசதி உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்குவதாக அறிவிக்கின்றன. ஆனால் முதல் முறையாக சூப்பர் டெக் நிறுவனம் ரூ. 1.38 கோடி மதிப்பிலான வீட்டை வாங்கும் வாடிக்கையாளருக்கு, ரூ. 22 லட்சம் மதிப்பிலான ஸ்டுடியோ வீடு ஒன்றை இலவசமாக அளிப்பதாக அறிவித்துள்ளது.
நொய்டா சிட்டி சென்டரில் இந்நிறுவனம் கேப்டவுன் பிராஜெக்ட் எனும் கட்டுமானத்தை மேற்கொண்டுள்ளது. இங்கு 2,300 சதுர அடி பரப்பளவிலான மேல்தள குடியிருப்பின் விலை ரூ. 1.38 கோடியாகும்.