வணிகம்

தென்கிழக்காசிய நாடுகளுடனான வர்த்தகம் 10,000 கோடி டாலரை தொடும்

செய்திப்பிரிவு

தென்கிழக்காசிய நாடுகளுடனான வர்த்தகம் 10,000 கோடி டாலர் எட்டும் என வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம் நாடுகளுடனான இருவழி வர்த்த கத்தில் தற்போது 8,000 கோடி டாலர் வர்த்தகம் நடந்துள்ளது, இந்த வர்த்தகம் அடுத்த வருடத்தில் 10,000 கோடி டாலராகவும், 2022-ம் ஆண்டு இரு மடங்காகவும் உயரும் என்றார்.

தெற்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு நாடுகளுடனான தாராள வர்த்தக ஒப்பந்தம் 2015 ஜூலை 01 முதல் அமலுக்கு வரும் என்றார் அமைச்சர் நிர்மலா சீதாரமன். இந்த நாடுகளுடனான வர்த்த கத்தில் விவசாயம், திறன் மேம்பாடு, மின்சாரம் மற்றும் ஜவுளிதுறைகளில் பரஸ்பரம் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வணிக தொடர்பு, கலாச்சாரம், பண்பாட்டு தொடர்புகளும் இந்த நாடுகளு டனான உறவுக்கான முக்கிய காரணமாக இருக்கிறது என்றார்.

SCROLL FOR NEXT