தனியார் வங்கியான யெஸ் பேங்க் 20 கோடி டாலரை ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து உத்தரவாதமில்லாத கடனாக பெறுகிறது. இந்த தொகையைக் கொண்டு குறு தொழில்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு செலவிடப்போவதாக அறிவித்துள்ளது.
குறுகிய மூலதனம் தேவைப்படும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு மற்றும் மகளிருக்கு இதன் மூலம் பொருளாதார உதவி சாத்தியப்படும் என்று கூறியுள்ளார் ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குநர் டோட் ப்ரீலேண்ட். விவசாயிகளுக்கு வேளாண்மை பொருளாதாரத்தை மேம்படுத்தும் உதவிகளும் இதன் மூலம் விரைவாக கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய யெஸ் வங்கியின் தலைவர் ரானா கபூர் இதன் மூலம் எங்களது வங்கியின் பொறுப்பு அதிகரித்துள்ளது என்றார்.