ஒருமுறை படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்த போது பயணித்த ஸ்போர்ட்ஸ் கார் போர்ஷே கரேரா. என்னோட கனவு காரும் இதுதான். ஜாகுவார், லம்போகினி மாதிரி சொகுசு கார்களின் லுக்கைப்போல பார்த்த நிமிடத்திலேயே ஈர்க்கும் கார். இந்த கார் எனக்கு பிடிப்பதற்கு முக்கியக் காரணம் செல்ஃப் டிரைவிங்குக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். பெண்களுக்கான ஸ்போர்ட்ஸ் கார் மாதிரியான வடிவமைப்பு, பின் பக்க என்ஜின் அமைப்பு என்று இதன் சிறப்பம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். உலகத்திலேயே எனக்கு பிடித்த விஷயம் இரண்டு.. ஒன்று வைரம். மற்றொன்று போர்ஷே கரேரா...!