ஜேபி குழுமத்தின் இரண்டு சிமென்ட் உற்பத்தி பிரிவுகளை அல்ட்ரா டெக் சிமென்ட் நிறுவனம் 5,400 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. தமது நீர் மின்சக்தி நிலையங்களை விற்ற ஒரு மாதத்துக்குள் சிமென்ட் ஆலைகளையும் ஜேபி குழுமம் விற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில், பேலாவில் இருக்கும் 26 லட்சம் டன் உற்பத்தி திறனுடைய சிமென்ட் தொழிற்சாலை கூடவே 25 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் மற்றும், சித்தியில் இருக்கும் 23 லட்சம் டன் உற்பத்தி திறனுடைய தொழிற்சாலை மற்றும் 155 மெகா வாட் மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை அல்ட்ரா டெக் குழுமம் வாங்கி இருக்கிறது. கடந்த வருடம் குஜராத்தில் இருக் கும் ஆலையை 3,800 கோடி ரூபாய்க்கு கேபி குழுமம் விற்றது.
இந்த இரண்டு நிறுவனங்களை வாங்கியதன் மூலம் அல்ட்ராடெக் நிறுவனத்தின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 6.5 கோடி டன்னாக உயர்ந்திருக்கிறது. 2016-ம் ஆண்டுக்குள் 7.1 கோடி டன் அளவுக்கு உற்பத்தி திறனை உயர்த்த வேண்டும் என்பது அல்ட்ராடெக் நிறுவனத்தின் இலக்காகும்.
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் கடன் சுமைகளை குறைப்பதற்காக இந்த நிறுவனங் களை ஜேபி குழுமம் விற்று வருகிறது. இதுவரை 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக் களை இந்த நிறுவனம் விற்றிருக் கிறது. இந்த இரண்டு யூனிட்களை விற்ற பிறகும் சிமென்ட் உற்பத்தி யில் மூன்றாவது பெரிய நிறுவன மாக ஜெய் பிரகாஷ் அசோசி யேட்ஸ் இருக்கிறது என்று நிறு வனத்தின் செயல் தலைவர் மனோஜ் கௌர் தனது அறிக் கையில் தெரிவித்திருக்கிறார்.