வணிகம்

வரிஏய்ப்பு, கடத்தலை தடுக்க உலகநாடுகள் ஒத்துழைப்பு தேவை: நிதியமைச்சர் அருண்ஜேட்லி பேச்சு

செய்திப்பிரிவு

வரிஏய்ப்பு மற்றும் கடத்தலை தடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு தேவை என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளிடையே சுதந்திரமான வர்த்தகம் என்பது நியாயமான வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் ஜேட்லி கூறினார்.

வரி ஏய்ப்பு தொடர்பாக மிகுந்த வருத்தம் கொள்வதாகவும், வரி ஏய்ப்பைத் தடுப்பது நமது முன்னுள்ள முக்கிய பணி என்றும் குறிப்பிட்டுள்ளார். மண்டல அளவிலான சுங்கத்துறை மற்றும் அமலாக்கப் பிரிவின் 2-வது மாநாட்டில் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி “உலக நாடுகளிடையே தொழில்நுட்பம் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு சர்வதேச வர்த்தகம் தேவையாக இருக் கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை, நேபாளம், மியான்மார் நாடுகளைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். சார்க் நாடுகளிடையேயான இந்த மாநாட்டில், கள்ள நோட்டு, தங்க கடத்தல் மற்றும் போதை மருந்து கடத்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக் கப்படுகிறது.

SCROLL FOR NEXT