வணிகம்

‘வங்கி தொடங்க விருப்பம்’ - ரிலையன்ஸ் கேபிடல்

செய்திப்பிரிவு

சிறிய வங்கி அல்லது பேமென்ட் வங்கி தொடங்கும் திட்டம் இல்லை அதேசமயத்தில் அனைத்து விதமான சேவைகளையும் அளிக்கும் வங்கி தொடங்க விருப்பம் என்று ரிலையன்ஸ் கேபிடல் தெரிவித்திருக்கிறது.

பொது வங்கி தொடங்குவதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வரும் மார்ச் மாதம் வெளியிட இருக்கிறது. ரிலையன்ஸ் கேபிடல் இதற்கு விண்ணப்பிக்க இருக்கிறது. அதே சமயம், சமீபத்தில் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் 2.7 சதவீத பங்குகளை வாங்கிய ஜப்பான் நாட்டு வங்கியான எஸ்.எம்.டி.பி.(Sumitomo Mitsui Trust Bank)க்கு அதில் பத்து சதவீத பங்குகளை கொடுப்பது பற்றியும் ரிலையன்ஸ் கேபிடல் பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நீண்ட கால முதலீ’ட்டு திட்டத்துடன் அவர்கள் எங்களுடன் இணைந்திருக்கிறார்கள். எங்களது இணைப்பு எந்தெந்த பிஸினஸுக்கு தேவைப்படுமோ அனைத்திலும் இணைவோம் என்று ரிலையன்ஸ் கேபிடல் தெரிவித்திருக்கிறது.

ரிசர்வ் வங்கி இறுதி விதிமுறைகள் சமர்ப்பித்து, எங்களது விண்ணப்பத்தை ரிசர்வ் வங்கி அனுமதித்த பிறகுதான் இந்த அனைத்து நடவடிக்கைகளும் என்று ரிலையன்ஸ் கேபிடல் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் வங்கி தொடங்க அனுமதி கிடைத்த பிறகு அதில் எஸ்.எம்.டி.பி. நிச்சயம் ஒரு பங்குதாரராக இருக்கும். வங்கித்துறையில் அவர்களுக்கு இருக்கும் அனுபவம் நிச்சயம் இங்கு பயன்படும். இது இருவருக்குமே வெற்றிதான்.

இந்த நிலையில் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தில் ஏற்கெனவே ஜப்பானின் நிப்பான் லைப் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. அவர்கள் விரும்பும் பட்சத்தில் வாய்ப்பு அளிக்கப்படுமா என்று ரிலையன்ஸ் கேபிடல் தலைவர் சாம் கோஷிடம் கேட்டதற்கு, புதிய வங்கியில் அந்நிய முதலீடு 49 சதவீதம் வரை இருக்கலாம்.

அதனால் நிப்பான் லைப் நிறுவனமும் புதிதாக தொடங்கப்போகும் வங்கியில் முதலீடு செய்யலாம். இருந்தாலும் இது குறித்து நிப்பான் லைப் நிறுவனத்திடம் ஏதும் விவாதிக்கவில்லை என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT