ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் குஜராத்தில் கார் உற்பத்தி தொழிற்சாலை தொடங்க அம்மாநில அரசை அணுகியுள்ளது. ரூ.1,000 கோடி முதலீட்டில் இந்த கார் உற்பத்தி தொழிற்சாலை அமைய உள்ளது. அகமதாபாத் மாவட்டத்தில் இதற்கான தொழிற்சாலை அமைய உள்ளதாக அம்மாநில அரசின் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
ஹோண்டா நிறுவனம் அளித்த திட்டம் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை அடைந்துவிட்டது எனவும், விரைவில் மாநில அமைச்சரவை இதற்கான ஒப்புதலை அளிக்கும் எனவும் தெரிகிறது. ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலையை இந்த கிராமத்தில் நிறுவுவதாக அறிவித்திருந்தது.
குஜராத் அரசின் புதிய தொழில் கொள்கைபடி இந்த கார் உற்பத்தி ஆலைக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஹோண்டா நிறுவனத்தின் பிரதிநிதிகள் மாநில அரசின் தலைமைச் செயலாளரை இந்த திட்ட அனுமதிகள் தொடர்பாக சந்தித்து பேசினர்.