இன்டர்நெட் மற்றும் மீடியா நிறுவனமான சாப்ட்பேங்க் ரூ. 570 கோடி முதலீட்டை இந்திய நிறுவனம் ஒன்றில் மேற்கொள்ள உள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹவுசிங் டாட் காம் நிறுவனத்தில் முதலீட்டை செய்ய உள்ளது. பால்கன் எட்ஜ் மற்றும் பல முதலீட்டாளர்களும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளனர். இந்த முதலீட்டைக் கொண்டு 300 நகரங்களில் 4 கோடி வீடுகளை தனது இணையதளத்தில் இடம்பெறச் செய்ய முடியும் என தெரிகிறது. கடந்த இரண்டு வருடங்களில் இந்நிறுவனம் 12 கோடி டாலர் நிதியை திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.