ரியால்டி துறையைச் சேர்ந்த லவாசா நிறுவனம் ஐபிஒ மூலம் நிதி திரட்ட பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி அனுமதி வழங்கி இருக்கிறது. ஐபிஓ மூலம் 750 கோடி ரூபாய் நிதி திரட்ட இருக்கிறது லவாசா நிறுவனம்.
ஐபிஓ வெளியிட அனுமதி கோரி கடந்த ஜூலை மாதம் செபியிடம் விண்ணப்பித்திருந்தது லவாசா. புணே அருகே 10,000 ஏக்கரில் குடியிருப்புகளை கட்டி வருகிறது லவாசா நிறுவனம். ஐபிஓவுக்காக செபியிடம் இந்த நிறுவனம் அனுமதி வாங்கி இருப்பது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2,000 கோடி ரூபாய் திரட்ட அனுமதி பெற்றிருந்தது. ஆனால் அப்போதைய சந்தையின் சூழ்நிலை காரணமாக அந்த திட்டத்தை கைவிட்டது லவாசா. இப்போது 750 கோடி ரூபாய்க்கு (10 ரூபாய் முகமதிப்புள்ள) பங்குகளை வெளியிட திட்டமிட்டிருக்கிறது.