மத்திய நிதித்துறை செயலா ளராக ஹஸ்முக் ஆதியா நியமிக்கப்பட்டிருக்கிறார்.1981-ம் வருட குஜராத் பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இவர். இவருக்கு முன்பு நிதிச்சேவைகள் பிரிவு செயலாளரான ஜி.எஸ். சாந்து ரசாயன ஆயுதங்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜி.எஸ்.சாந்து 1980-ம் வருட ராஜஸ்தான் பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாவார்.
நிதித்துறையில் செயலர்கள் நிலையில் மேற்கொள்ளப்படும் மூன்றாவது மாற்றம் இதுவாகும். வருவாய்த் துறை செயலாளராக ராஜிவ் தாக்ரு, நிதிச் செயலாளரான அர்விந்த் மாயாராம் ஆகியோர் ஏற்கெனவே மாற்றப்பட்டனர்.
தற்போது நிதிசேவைகள் பிரிவு செலாளராக நியமிக்கப்பட் டிருக்கும் ஹஸ்முக் ஆதியா குஜராத் மாநில கூடுதல் தலை மைச் செயலாளராக இருக்கிறார். இதற்கு முன்பு கல்வித்துறை, முதல் அமைச்சரின் முதன்மை செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்தவர்.
மேலும் குஜராத் அரசின் சில நிறுவனங்களுக்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர். ஐஐஎம் ஆகமாதாபாத்தில் படித்தவர். குஜராத் அரசில் பலதிட்டங்களை உருவாக்கியவர்.
புதிய நிதிசேவைகள் செய லாளர் நியமிக்கப்பட்டதால் இன்று நடக்கவிருந்த பொதுத்துறை வங்கித்தலைவர்களுடான சந்திப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இதில் தன்ஜன் யோஜனா உள்ளிட்ட பல திட்டங்களை குறித்து பேசுவதாக இருந்தது. மேலும் வங்கித்தலைவர்களை பிரதமர் மோடி விரைவில் சந்திக்க இருக்கிறார். அதற்கான முன்னோட்டமாகவும் இந்த சந்திப்பு இருந்த நிலையில், புதிய நிதிச்சேவைகள் தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் 8 பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் பதவிகள் காலியாக இருக்கிறது. நவம்பர் மத்தியில் அந்த பதவிகள் நியமிக்கப்பட்ட பிறகே பொதுத்துறை வங்கித் தலைவர்களை பிரதமர் சந்திப்பார் என்று வங்கித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் தயாரிப்புக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட் டிருக்கிற சூழ்நிலையில் புதிய செயலாளர்கள் மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் உதவி யுடன் நிதி அமைச்சகம் பட்ஜெட் தயாரிக்க இருக்கிறது.
பொருளாதார விவகாரங் களுக்கான செயலாளராக ராஜிவ் மெஹ்ரிஷி, செலவு கணக்கு துறை செயலாளராக ராஜன், வருவாய்த் துறை செயலாளராக சக்திகாந்த தாஸ், பங்குவிலக்கு துறை செயலாளராக ஆராதனா ஜோரி மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகரான அர்விந்த் சுப்ரமணியம் குழு பட்ஜெட் தயாரிப்பில் இருக்கும்.