ஆட்டோமொபைல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜப்பானின் இசுஸூ மோட்டார் நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. புதிய ஆலை அங்குள்ள ஸ்ரீ சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைய உள்ளது.
இசுஸூ நிறுவனத்தின் துணைத் தலைவர் மசனோரி கடாயமா இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேச்சு நடத்தினர். கடந்த முறை சந்திரபாபு நாயுடு ஜப்பானுக்கு சென்ற போது ஆந்திரத்தில் ஆலை அமைக்க அதன் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார்.