வணிகம்

கண்களைப் பறிக்கும் பிஎம்டபிள்யூ - த்ரிஷா

செய்திப்பிரிவு

சினிமா ஷூட்டிங், சுற்றுப்பயணம் என்று சினிமா வாழ்க்கையைத் தொடங்கியதுமே என் முதல் யோசனையே, எனக்குப் பிடித்த மாதிரி, நானே ஒரு கார் வாங்க வேண்டும் என்பதுதான். எனக்குப்பிடித்த மாதிரி கார் என்றால் அதுக்கு கொஞ்சம் கூட ஆப்ஷனே தேவையில்லை. எத்தனை கார் கம்பெனியோட கேட்லாக்கை கொண்டு வந்து நீட்டினாலும் கண்களை மூடிக்கொண்டு பிஎம்டபிள்யூ கார் கேட்லாக்கை சரியாக டிக் அடித்துவிடுவேன்.

சின்ன வயதில் இருந்தே அந்த கார் மீது தனி பிரியம். இப்போதுகூட என்னிடம் இருப்பது அந்த கம்பெனியோட ‘5 சீரியஸ்’ கார். அதில் உள்ள இட வசதி, ஏ.சி, வடிவமைப்பு, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மியூசிக் சிஸ்டம் எபக்ட் இதெல்லாம் மற்ற எந்த காரிலும் நான் முழுமையாக உணர்ந்ததில்லை என்றார் த்ரிஷா.

SCROLL FOR NEXT