ஐ.டி. துறை நிறுவனமான பெர்சிஸ்டென்ட் சிஸ்டத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 29.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதேகாலத்தில் 51.88 கோடி ரூபாயாக இருந்த நிகரலாபம் இப்போது 67.19 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
நிறுவனத்தின் வருமானம் 33.8 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.333.96 கோடியாக இருந்த வருமானம் இப்போது ரூ.446.74 கோடியாக உயர்ந்திருக்கிறது.
எங்களது வளர்ச்சி தொடர்ந்து இருக்கும் என்றும் தேவை அதிகமாக இருக்கிறது என்றும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆனந்த் தேஷ்பாண்டே தெரிவித்தார்.
ஒட்டுமொத்த நிதி ஆண்டில்(2013-14) நிறுவனத்தின் வருமானம் 28.9 சதவீதம் அதிகரித்து ரூ.1,669.15 கோடியாக இருக்கிறது.
அதேபோல நிறுவனத்தின் நிகரலாபம் 32.9 சதவீதம் அதிகரித்து ரூ.249.28 கோடியாக இருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் டாலர் அடிப்படையிலான வருமானம் 15.2 சதவீதம் அதிகரித் திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 237.82 மில்லியன் டாலராக இருந்த வருமானம் இப்போது 274.06 மில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.