வணிகம்

ட்விட்டரில் எஸ்.பி.ஐ.

செய்திப்பிரிவு

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. ட்விட்டரில் கணக்கை துவங்கி இருக்கிறது.

ஏற்கெனவே ஃபேஸ்புக், யூடியூபில் தனியாக பக்கம் ஆரம்பித்த எஸ்.பி.ஐ. இப்போது ட்விட்டரிலும் கணக்கு ஆரம்பித்திருக்கிறது.

இளைஞர்கள், படித்த வாடிக்கையாளர்கள், டெக்னாலஜி மூலம் இணைந்திருப்பவர்களுக்கு எஸ்.பி.ஐ.- திட்டங்களை கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம் என்று வங்கி தெரிவித்திருக்கிறது.

ஆரம்பித்த ஒரு நாளில் 1147 நபர்கள் எஸ்.பி.ஐ.யின் ட்விட்டர் பக்கததை பின் தொடர ஆரம்பித்திருக்கிறார்கள்.

எஸ்.பி.ஐ. அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளம் >https://twitter.com/TheOfficialSBI

SCROLL FOR NEXT