வணிகம்

பட்ஜெட் 2019: விலை உயரும்-குறையும் பொருட்களின் விவரம்

செய்திப்பிரிவு

எரிபொருட்களுக்கும், நகைகளுக்கும் நுகர்வோர் அதிகப் பணம் செலவழிக்க வேண்டி வரும். அதே போல் ஆண்டுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை மற்றும் ரூ.5 கோடிக்கும் மேல்  வரிவருவாய் உள்ள தனிநபர்களுக்கான வரியில் சர்சார்ஜ் விதித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இது இவர்களின் நிச்சயமான வரியை முறையே 3% ஆகவ்ம் 7% ஆகவும் அதிகரித்துள்ளது.

அதிக செலவாகும் பொருட்கள்:

தங்கம் மற்றும் வெள்ளி.

பெட்ரோல், டீசல்

இறக்குமதி புத்தகங்கள்

டைல்ஸ்

முந்திரிப் பருப்பு

வினைல் தரையமைப்பு

ஆட்டோ உதிரி பாகங்கள்

சில வகை சிந்தெடிக் ரப்பர்

டிஜிட்டல் மற்றும் வீடியோ ரெக்கார்டர்கள், மற்றும் சிசிடிவி கேமராக்கள்.

சிகரெட், மெல்லும் புகையிலை வகையறாக்கள், ஜரிதா, மற்றும் பிற புகையிலைப்பொருட்கள்

முழுதும் இறக்குமதி செய்யப்படும் கார்கள்.

விலை குறையும் பொருட்கள்:

வீடுகள்

மின்சார வாகனங்கள்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாத பாதுகாப்பு உபகரணங்கள்

பதனிடப்படாத மற்றும் பாதி முடிக்கப்பட்ட தோல்

SCROLL FOR NEXT