ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் கூட் டமைப்புடன் லண்டனைச் சேர்ந்த ஆதி குழுமம் இணைந்து நிறு வனத்தின் 75 சதவீத பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் (என்சிஎல்டி) வங்கிகள் கூட் டமைப்பு விட்டுவிட்டது. இத னால் திவால் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறுவன ஊழியர்களுடன் இணைந்து 75 சதவீத பங்குகளை வாங்க ஆதிகுழுமம் விண்ணப்பித்துள்ளது.
கடந்த 20-ம் தேதி ஜெட் ஏர்வேஸுக்கு கடன் வழங்கிய எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் கூட் டமைப்பு என்சிஎல்டி-யிடம் திவால் நடைமுறைகளை மேற்கொள்ள விண்ணப்பித்தன.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்கிகளுக்கு ரூ.8,500 கோடி கடன் பாக்கி வைத்துள்ளது. வங்கிகள் உட்பட மொத்தம் 26 நிறுவனங்கள் ஜெட் ஏர்வேஸுக்கு கடன் வழங்கியுள்ளன. பிற நிறுவனங்களுக்கு தர வேண் டிய கடன் நிலுவைத் தொகை ரூ.25,000 கோடியாகும். இதில் ஊழியர்களுக்கான சம்பளமும் அடங்கும்.
ஜெட் ஏர்வேஸ் பணியாளர்கள் கூட்டமைப்பும் ஆதி குழுமும் இணைந்து 75 சதவீத பங்குகளை வாங்க முன்வந்துள்ளன. விமான நிறுவன பணியாளர்களே நிறு வனத்தை நடத்த முன்வந்திருப்பது இந்திய விமானத்துறை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிறுவனத்தின் ஒவ்வொரு ஊழி யரும் நிறுவனத்தின் உரிமையாள ராவார்.
இதுகுறித்து செய்தியாளர்களி டம் பேசிய பைலட்டுகள் சங் கத்தின் பொதுச் செயலரான கேப் டன் அஷ்வனி தியாகி, இந் நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக பணியாற்றியவர். புதிய முயற்சி மிகவும் சவால் நிறைந்தது. இதன் மூலம் நிறுவனத்தை மீட்க முயற்சித் துள்ளதாகக் குறிப்பிட்டார்.