வணிகம்

‘செல்வமகள்’ உட்பட தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு

செய்திப்பிரிவு

செல்வமகள் சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் திட்டம் உட்பட பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி, மூத்த குடிமக்களுக்கான ஐந்தாண்டு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி 8.7 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு பத்திரத்துக்கான வட்டி விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

பிபிஎப் எனப்படும் பொதுமக்களுக்கான வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கான வட்டி விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கிஸான் விகாஸ் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 7,7 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதிர்ச்சி காலம் 112 மாதங்களில் இருந்து 113 மாதங்களாக உயரும்.

3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 7.8 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

செல்வமகள் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 8.5 சதவிகித்தில் இருந்து 8.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT