வணிகம்

கச்சா எண்ணெய் விலை சரிவு

ராய்ட்டர்ஸ்

கச்சா எண்ணெய் விலை நான்கு வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது.

நேற்றைய வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் 3 சதவீத அளவுக்கு சரிந்து ஒரு பீப்பாய் 82 டாலருக்கு அருகே வர்த்தகமானது.

கடந்த அக்டோபர் 2010-ம் ஆண்டுக்கு பிறகு இந்த அளவுக்கு கச்சா எண்ணெய் சரிவது இப்போதுதான்.

2010-ம் ஆண்டு அக்டோபர் ஒரு பீப்பாய் 82.08 டாலருக்கு வர்த்தகமானது. இப்போது 82.18 டாலருக்கு வர்த்தகமாகியது.

உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளரான சவுதி அரேபியா தன்னுடைய அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கான விலையைக் குறைத்ததுதான் விலை சரிவுக்குக் காரணமாகும்.

கடந்த ஜூன் மாதம் ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் 115 டாலருக்கு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT