பாரத் போர்ஜ் லாபம் 81% உயர்வு
ஆட்டோமொபைல்ஸ் துறைக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனமான போர்ஜ் இந்தியாவின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 81% உயர்ந்து ரூ.174 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிறுவனத்தின் ரூ96 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் நிகர விற்பனையும் 34% உயர்ந்து ரூ.1,138 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 845 கோடி ரூபாயாக இருந்தது. இரண்டாம் காலாண்டு நிகர லாபம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்திருக்கிறது குறிப்பாக வட அமெரிக்க சந்தையில் சிறப்பாக இருக்கிறது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாபா கல்யாணி தெரிவித்தார்.
அதானி போர்ட்ஸ் லாபம் ரூ. 573 கோடி
அதானி போர்ட்ஸ் மற்றும் எஸ்.இ.இசட் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 68% உயர்ந்து 573 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.341 கோடி ரூபாயாக இருந்தது. மொத்த வருமானம் 1,149 கோடி ரூபாயிலிருந்து 1655 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
அதானி பவர்
அதானி குழுமத்தை சேர்ந்த அதானி பவர் நிறுவனம் செபடம்பர் காலாண்டில் 799 கோடி ரூபாய் நஷ்டமடைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 1,072 கோடி ரூபாய் அளவுக்கு இந்த நிறுவனத்தின் நஷ்டம் இருந்தது. அதே சமயம் மொத்த வருமானம் 36 சதவீதம் உயர்ந்து.
தேனா வங்கி லாபம் சரிவு
தேனா வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் பாதியாக சரிந்து 52 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகரலாபம் 107 கோடி ரூபாயாக இருந்தது. மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ. 2,599 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ. 2,855 கோடியாக உயர்ந்திருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 3 சதவீதத்திலிருந்து இப்போது 5.12% உயர்ந்திருக்கிறது.