வணிகம்

2016-17 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் கடன் 20% உயர்வு

செய்திப்பிரிவு

பொதுத்துறை வங்கிகளின் கடன் 2017-ம் ஆண்டில் ரூ.92 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் படி இது தெரியவந்துள்ளது. மேலும் பொதுத்துறை வங்கிகளின் கடன் சுமை 2016-17-ம் ஆண்டில் சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. 9,000 ஆயிரம் நபர்கள் கடனை வாங்கி திருப்பி செலுத்தாத வகையில், மார்ச் மாதம் வரை கடன் சுமை ரூ. 92,000 கோடி அதிகரித்துள்ளது.

2016-17-ம் நிதியாண்டின் மார்ச் மாத நிலவரப்படி வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்களிடமிருந்து கடன் நிலுவை ரூ.92,376 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி இந்த தொகை ரூ.76,685 கோடியாக இருந்தது. கடன் நிலுவை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 20.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் ஆண்டு கணக்கீட்டின்படி, வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கையும் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 8,915 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 8,167 ஆக இருந்தது. நிதி அமைச்சகம் திரட்டிய தகவல்கள்படி இது தெரிய வந்துள்ளது. கடனை திருப்பி செலுத்தாத 8,915 நபர்களில், 1,914 நபர்கள் மீது வங்கிகள் முதல் தகவல் அறிக்கை (எப் ஐ ஆர்)பதிவு செய்துள்ளன. இவர்களது கடன் நிலுவை ரூ.32,484 கோடியாகும்.

2016-17-ம் நிதியாண்டில் எஸ்பிஐ மற்றும் அதன் ஐந்து துணை வங்கிகள் உள்ளிட்ட அனைத்து பொதுத் துறை வங்கிகளும் ரூ.81,683 கோடி வரை கடன் தள்ளுபடி செய்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில் இது அதிகமாகும். கடந்த ஆண்டு தள்ளுபடி செய்த தொகையை விட இது 41 சதவீதம் அதிகமாகும்.

2016-17-ம் நிதியாண்டில் எஸ்பிஐ மற்றும் அதன் முன்னாள் துணை வங்கிகள் தங்களது வாராக்கடனில் தள்ளுபடி செய்த தொகை ரூ.27,574 கோடியாகும். பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி குறித்த ரிசர்வ் வங்கியின் தகவல்கள்படி இது தெரிய வந்துள்ளது.

மார்ச் 2017 இறுதி நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் அளவு ரூ.6.41 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இது ரூ.5.02 லட்சம் கோடியாக இருந்தது.

கடனை திருப்பி செலுத்தாமல் இருப்பதற்கான காரணங்களை ஆராயுமாறு ரிசர்வ் வங்கி விதிகளை கடுமையாக்கியுள் ளது. மேலும் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று செலுத்தாத நிறுவனர்கள் தங்களது பொறுப்புகளை தட்டிக் கழி க்க முடியாத வகையில் ரிசர்வ் வங்கி விதிகளை கடுமையாக்கியுள்ளது. அவர்கள் முழு நேர இயக்குநராக இல்லையென் றாலும் கடன் பொறுப்புகளிலிருந்து விலக முடியாது. தவிர வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாத கடனாளிக ளின் பெயர் மற்றும் புகைப்படத்தை வங்கிகள் வெளியிடவும் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. -பிடிஐ

SCROLL FOR NEXT