வணிகம்

காலாண்டு முடிவுகள் - அமரராஜா பேட்டரீஸ், பாஷ் நிறுவனம், எவரெடி

செய்திப்பிரிவு

அமரராஜா பேட்டரீஸ் லாபம் ரூ. 100 கோடி

அமரராஜா பேட்டரீஸ் நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் ரூ. 100.30 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய லாபத்தை விட 6 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு நிறுவனத்தின் லாபம் ரூ. 94.58 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வருமானம் 32 சதவீதம் அதிகரித்து ரூ. 1,065 கோடியைத் தொட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 807 கோடியாகும். முதல் அரையாண்டில் நிறுவனத்தின் லாபம் 7.21 சதவீதம் அதிகரித்து ரூ. 206.26 கோடியாக இருந்தது.

பாஷ் நிறுவன லாபம் 30 சதவீதம் உயர்வு

ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை தயாரிக்கும் பாஷ் நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 306 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 234.25 கோடியாகும். இந்நிறுவனம் ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலத்தை நிதியாண்டாகக் கணக்கிடுகிறது. இதன்படி இந்நிறுவனம் மூன்றாம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை நேற்று மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பியது. நிறுவனத்தின் நிகர வருமானம் 19 சதவீதம் அதிகரித்து ரூ. 2,555.76 கோடியாக உயர்ந்தது. முந்தைய ஆண்டு வருமானம் ரூ. 2,147.09 கோடியாக இருந்தது.

எவரெடி லாபம் 4 மடங்கு அதிகரிப்பு

பேட்டரி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள எவரெடி நிறுவனத்தின் லாபம் செப்டம்பர் காலாண்டில் நான்கு மடங்கு உயர்ந்து ரூ. 17.64 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் நிறுவனம் ரூ. 3.7 கோடியை லாபமாக ஈட்டியிருந்தது குறிப் பிடத்தக்கது. நிறுவனத்தின் விற்பனை வருமானம் ரூ. 354.29 கோடியாகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் எட்டிய வருமானத்தைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். நிறுவனம் செலவைக் குறைக்கும் நடவடிக்கையை எடுத்து ரூ. 10.12 கோடியை மிச்சப்படுத்தியது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ. 7.93 கோடி மிச்சப்படுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT