வணிகம்

3% விலையைக் குறைக்க மாருதி முடிவு

செய்திப்பிரிவு

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது கார் விலைகளை 3% வரை குறைத்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரித்திட்டத்தின் பயன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது.

“மாருதி சுசுகி விலைகள் 3% குறைக்கப்படுகின்றன. வெவ்வேறு அளவில் விலை குறையும். காரணம் ஜிஎஸ்டிக்கு முந்தைய பல்வேறு வாட் வரிகள்” என மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் டீசல் கார் வகைகளான சியாஸ் மற்றும் எர்டிகா கார்களின் விலைகளை ரூ.1 லட்சம் வரை மாருதி உயர்த்தியுள்ளது. காரணம் ஹைபிரிட் வகை கார்களுக்கான வரிச் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த விலை உயர்வும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் என்றும் மாருதி தெரிவித்திருக்கிறது.

ஜாகுவர் 7% குறைப்பு

டாடா மோட்டார்ஸின் ஜாகுவார் லாண்ட் ரோவர் கார்கள் 7 சதவீதம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டியின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது.

சராசரியாக அனைத்து வகை கார்களும் 7 சதவீதம் வரை (விற்பனையக விலை) குறைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரோஹித் சூரி தெரிவித்திருக்கிறார். இந்த நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் 25 விற்பனையகங்கள் உள்ளன.

SCROLL FOR NEXT