வணிகம்

`நவம்பர் இறுதியில் பேமெண்ட் வங்கிகளுக்கான விதிமுறைகள்’

செய்திப்பிரிவு

பேமெண்ட் வங்கிகளுக்கான இறுதி விதிமுறைகள் நவம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் சிறிய வங்கிகளுக்கான விதிமுறைகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்றும் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர்களுள் ஒருவரான எஸ்.எஸ்.முந்த்ரா தெரிவித்தார்.

பேமெண்ட் வங்கிகளுக்கான இறுதி விதிமுறை ரிசர்வ் வங்கியால் தயாரிக்கப்பட்டு, இப்போது அரசின் வசம் இருக்கிறது. இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்ப்பார்ப்பதாக முந்த்ரா தெரிவித்தார். அடுத்த மாதம் சிறிய வங்கிகளுக்கான விதிமுறைகள் வெளியாகும் என்றார். சிறிய வங்கிகள் டெபாசிட், கடன் உள்ளிட்ட வங்கியின் அனைத்து செயல்பாட்டினையும் செய்யலாம். ஆனால் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே செயல்பட வேண்டும். ஆனால் பேமேண்ட் வங்கிகள் டெபாசிட் மற்றும் ரெமிட்டன்ஸ் உள்ளிட்ட சேவைகளை மட்டுமே அளிக்க முடியும்.

கடன் வளர்ச்சி விகிதம் குறித்து பேசிய முந்த்ரா, இப்போதைக்கு மந்த நிலையிலே இருக்கிறது. நான்காம் காலாண்டில் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். மேலும் டெபாசிட் வளர்ச்சி விகிதம் கடன் வளர்ச்சி விகிதத்தை விடவும் அதிகமாக இருக்கும் என்றார்.

SCROLL FOR NEXT