வணிகம்

ஜிஎஸ்டி-யால் பங்குச் சந்தைகள் உச்சம்

செய்திப்பிரிவு

ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு நேற்று தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தகமும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடுகள் 1 சதவீதம் வரை உயர்ந்தன.

சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 31221 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. நிப்டி 94 புள்ளிகள் அதிகரித்து 9615 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. ஆட்டோ, எப்எம்சிஜி துறைகள் அதிக ஏற்றம் கண்டன. மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள் 1 சதவீதம் வரை உயர்ந்தன.

நேற்றைய வர்த்தகத்தில் பார்தி இன்பிராடெல் பங்கு 6.19 சதவீதம் உயர்ந்தது. ஐடிசி பங்கு 5.82 சதவீதம் வரை அதிகரித்தது. ஹிண்டால்கோ, கோல் இந்தியா, ஐஷர் மோட்டார்ஸ் பங்குகள் 2 சதவீதத்துக்கும் அதிகமான லாபத்தைச் சந்தித்தன.

இன்போசிஸ், ஆசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், ஓஎன்ஜிசி, கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதம் வரை லாபம் கண்டன. எண்டிபிசி, கோடக் மஹிந்திரா, சன் பார்மா பங்குகள் 1.5 சதவீதம் வரையில் இறக்கத்தைச் சந்தித்தன.

SCROLL FOR NEXT