வணிகம்

தொழில்நுட்ப கல்விக்கு இந்திய அரசு அதிக நிதியை ஒதுக்க வேண்டும்: பெண்டியம் பொறியாளர் வினோத் தாம் கருத்து

செய்திப்பிரிவு

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை இந்திய அரசாங்கம் காப்பாற்று வதை விட தொழில்நுட்ப கல்விக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என்று `பெண்டியம் பொறியாளர்’ வினோத் தாம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில் அனுப வம் வாய்ந்த பொறியாளரான வினோத் தாம், இண்டெல் நிறுவனத்தின் பெண்டியம் பிராசசரை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றியவர். இவர் வென்ச்சர் கேபிடல் நிறுவனத் தையும் நடத்தி வருகிறார்.

தற்போது அமெரிக்காவில் சாப்ட்வேர் துறை வளர்ச்சி குறை வாக இருக்கிறது என்று வினோத் தாம் நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்காவில் செயற்கை நுண் ணறிவு தொழில்நுட்பம் சாப்ட்வேர் துறையை ஆட்கொண்டுள்ளது. இதனால் உடனடியாக வேலை இழப்புகள் ஏற்படும். இதன் காரணமாக சமூகத்திலும் பாதிப்பு உண்டாகலாம். கடை நிலை வேலை வாய்ப்புகள் மட்டுமல்லாமல் நடுத்தர வேலை வாய்ப்புகளும் பாதிக்கப்படும்.

டேட்டா அறிவியல், அல்காரி தம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்ற துறை களில் மட்டுமே புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டோமேஷனும் வளர்ந்து வருகிறது. இதனால் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை வேலை இழப்புகள் ஏற்படலாம். முன்பெல்லாம் சாப்ட்வேர் உலகத்தை ஆள்கிறது என்று கூறுவார்கள். தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சாப்ட்வேரை ஆள்கிறது.

இந்தியா தற்போது உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவருகிறது. ஆனால் தொழில்நுட்பம் மாறிக் கொண்டு வருகிறது. அதனால் இந்தியா வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சிறந்த இடமாக இருக்காது. ஆனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்து விளங்குமானால் அதற்கான வாய்ப்பு அதிகம். ஸ்டார்ட் அப் நிறுவனங்களை காப்பாற்றுவதை விட இந்திய அரசாங்கம் தொழில்நுட்ப கல்விக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என்றார் வினோத் தாம்.

SCROLL FOR NEXT