நடுத்தர கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதம் வரை சிண்டிகேட் வங்கி குறைத்துள்ளது. இந்த வட்டிக்குறைப்பு ஜூலை 10-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக சிண்டிகேட் வங்கி தெரிவித்துள்ளது.
ஒரு மாத கால நடுத்தர கடனுக்கான வட்டி விகிதம் 8.35 சதவீதத்திலிருந்து 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மூன்று மாத கால நடுத்தர கடனுக்கு வட்டி விகிதம் 8.40 சதவீதத்திலிருந்து 8.15சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆறு மாத கால நடுத்தர கடனுக்கு வட்டி விகிதம் 8.60 சதவீதத்திலிருந்து 8.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு வருட நடுத்தர கால கடனுக்கான வட்டி விகிதம் 8.75 சதவீதத்திலிருந்து 8.60 சதவீதமாக குறைத்துள்ளது.