வணிகம்

இவரைத் தெரியுமா?- பால் இ ஜேகப்ஸ்

செய்திப்பிரிவு

மென்பொருள் நிறுவனமான குவால்காம் நிறுவனத்தின் தலைவர். இதற்கு முன்பு தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பு வகித்தவர்.

மொபைல் கம்யூனிகேஷன் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். வயர்லெஸ் தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் தொடர்பாக 84 காப்புரிமைகள் பெற்றுள்ளார்.

குவால்காம் நிறுவனம் மற்றும் மொபைல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்.

ஸ்மார்ட்போன் முதல் இயங்குதளமான பாம் ஓஎஸ், ஜிபிஎஸ் வசதி, கியூ சாட், டாக் ஸ்மார்ட் வாட்ச் போன்ற தொழில்நுட்பங்களை மேம்படுத்தியவர்.

1990ம் ஆண்டில் குவால்காம் நிறுவனத்தில் மொபைல் போன் டிஜிட்டல் சிக்னல் பிராஸஸர் பிரிவில் மேம்பாட்டு பொறியாளராக பணிக்குச் சேர்ந்தவர்.

உலக வர்த்தக அமைப்பின் சர்வதேச தொழில் குழு உறுப்பினர். அமெரிக்கா- கொரியா தொழில் குழு, அமெரிக்க- இந்தியா சிஇஓ குழு, பெர்கிளே பல்கலைக் கழக ஆலோசனைக் குழு போன்றவற்றிலும் உள்ளார்.

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் எலெக்டிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர்.

SCROLL FOR NEXT