டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2001-ம் ஆண்டில் இருந்து இந்த பொறுப்பில் உள்ளார். நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் சர்வதேச தலைவராகவும் பொறுப்பு வகிக் கிறார்.
தொழில்துறையில் 32 ஆண்டு களுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர். உற்பத்தி, தொழில் உத்திகள், வாடிக்கையாளர் சேவை, வளங்கள் சேகரிப்பு உள்ளிட்டவற்றில் வல்லுநர்.
நிறுவனத்தில் 2001-ம் ஆண்டில் இணைந்தார். சர்வதேச அளவிலான செயல்பாடுகள், மனித வளம், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்
சிஎம்சி, சி-டாட், ஐஷர், டெகும்ஸே உள்ளிட்ட நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இந்திய பெரிய நிறுவனங்களில் சிறந்த நிதி அதிகாரிக்கான யெஸ் வங்கி விருது, சிஎன்பிசி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டமும், அகமதாபாத் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் மேலாண்மையியல் உயர்கல்வியும் முடித்தவர்.