வணிகம்

சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு

செய்திப்பிரிவு

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் மேலும் குறைத்தது. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்), கிஸான் விகாஸ் பத்திரம் ஆகியவற்றுக்கான வட்டி விகிதம் 0.10 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது.

ஜூலை 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரையிலான காலாண்டுக்கு இந்த வட்டி விகிதம் பொருந்தும். புதிய வட்டி விகிதங்களின்படி பிபிஎப் வட்டி விகிதம் 7.90 சதவீதத்தில் இருந்து 7.80 சதவீதமாக குறையும். கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் பிபிஎப்-க்கு 8.70 சதவீத வட்டி வழங்கப்பட்டது.

2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அப்போது பிபிஎப் வட்டி விகிதம் 8.10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

தற்போதைய சிறு சேமிப்பு திட்டங்களிலேயே சுகன்யா சம்ரிதி திட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்துக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. கடந்த காலாண்டில் 8.40 சதவீதம் வழங்கப்பட்டது. தற்போது 8.30 சதவீதமாக குறைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT