ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குப் பிறகு வர்த்தக வளாகங்களை, கடைகளைக் கண்காணிக்க அதிகாரிகள் பார்வையிடச் சென்றதாக ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன. அப்படி எந்த அதிகாரியையும் அனுப்பவில்லை என்று அரசுத் தரப்பில் மறுப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஜிஎஸ்டி தலைமை ஆணையர் அலுவலகம் (டெல்லி மண்டலம்) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஜிஎஸ்டி அதிகாரிகளைப்போல சில போலி நபர்கள் சுற்றிவருகிறார்கள். கடைகளில் நடைமுறைப்படுத்தப்படும் ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குப் பிறகான விலை மாற்றங்களைக் கண்காணிக்க அதிகாரிகள் பார்வையிடச் சென்றதாக ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன. அவர்கள் வியாபாரிகளிடமிருந்தும் வாடிக்கையாளர்களிடமிருந்தும் பணம்பறிப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. கடைகளை பார்வையிட அதிகாரப்பூர்வ துறைசார்ந்த அதிகாரிகள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
வர்த்தகர்கள் இது தொடர்பான பிரச்சனைகளை சந்தித்தால், அவர்கள் 011-23370115 என்ற தொலைபேசி எண்ணிற்கோ மத்திய வருவாய்க் கட்டிடம், ஐ.பி.எஸ்டேட், புதுடெல்லி, என்ற முகவரிக்கோ தொடர்புகொண்டு தங்கள் புகாரை பதிவு செய்யலாம். வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்கொண்டுவரும் இந்த பிரச்சனைமிகுந்த இடைப்பட்ட காலப்பகுதியில் வருவாய்த்துறை அவர்களது பிரச்சனை எளிதாக்கவே விரும்புகிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.