இந்திய கலைஞர்களின் கை வினைப் பொருள்களை மின்னணு வர்த்தக முறையில் விற்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
அகமதாபாத்தில் உள்ள இந்திய நிர்வாகவியல் கல்வி மையத்தில் நடைபெற்ற பொது மக்களுக்கான கொள்கை வகுப்பது தொடர்பான நிகழ்ச்சி யில் பேசிய மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இக்கருத்தைத் தெரிவித்தார்.
மீரட்டில் உள்ள காஷி பகுதி கைத்தறி ஆடைகள், திருப்பூர் பனியன்கள் உள்ளிட்ட உள்ளூர் கலைஞர்களின் கைவினைப் பொருள்களை மின்னணு வர்த் தகம் (இ-காமர்ஸ்) மூலம் விற்பதற்கான வாய்ப்புகளைக் கண்டறியுமாறு இந்தியா போஸ்ட் துறையைக் கேட்டுக் கொண் டுள்ளதாக அவர் கூறினார்.
தபால்துறையைச் சேர்ந்த இந்தியா போஸ்ட் மிகப் பெரும் ஒருங்கிணைப்பைக் கொண் டுள்ளது. நாடு முழுவதும் 1.55 லட்சம் தபால் அலுவலகங்கள் இருப்பதால் மின்னணு வர்த்த கத்தின் மூலம் செயல்படுவது குறித்து கடந்த புதன்கிழமை தபால்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக பிரசாத் குறிப்பிட்டார்.
2012-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற மின்னணு வர்த்தகம் 600 கோடி டாலர் எனவும் இது 2021-ம் ஆண்டில் 7,600 கோடி டாலர் அளவுக்கு வளரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்கச் செய்வதற்காக அரசு தொடங்கிய ஜன்தன் திட்டத்தில் ஒரு சில மாதங்களில் 7 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டதை சுட்டிக் காட்டிய அமைச்சர், இதற்குரிய ஆலோசனைகளை பொதுமக்களிடமிருந்தும் அரசு பெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
அரசின் செயல்திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கு உரிய உத்திகளை வகுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக ஐஐஎம் தலைவர் (மார்க்கெட்டிங் பிரிவு) தீரஜ் சர்மா குறிப்பிட்டார்.
இதுபோன்ற கருத்தரங்குகள் மூலம் மக்களின் கருத்தையறிந்து அதற்கேற்ப பொதுமக்களுக்கு நன்மை விளைவிக்கும் கொள்கை களை வகுக்க முடியும் என்று நம்புவதாக சர்மா மேலும் கூறினார்.