வணிகம்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி: சிறு தொழில் கடனுக்கு முன்னுரிமை

செய்திப்பிரிவு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் சில்லரை வர்த்தகக் கடன்களை அதிகரிப்பதற்கான முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்காக சென்னையில் குறிப்பிட்ட வங்கிக் கிளைகளில் `ரீடெயில் மார்ட்’ என்கிற அடிப்படையிலான திட்டத்தை தொடங்கியுள்ளது. சில்லரை வர்த்தக நிறுவனங்கள் தொழில்நுட்பத்தில் மேம்படுவது மற்றும் தங்களது வழக்கமான முறையிலிருந்து டிஜிட்டல் முறைகளுக்கு மாறுவதற்கு ஏற்ப இந்த துறையின் கடனுதவி மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது.

சில குறிப்பிட்ட கிளைகளில் சில்லரை வர்த்தகக் கடன்களை அளிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தவிர பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா மானியம் இல்லாத வீட்டுக் கடனும் ஐஓபியில் தற்போது கிடைக்கிறது. தவிர எந்த பிணையமும் இல்லாமல் ரூ. 7.5 லட்சம் வரையிலான கல்விக் கடன், கார் கடன் உள்ளிட்டவையும் அனுமதிக்கிறது. குறிப்பிட்ட கால கடன்களுக்கு சிறப்பான வட்டி விகிதத்தையும் அளிக்கிறது. இந்த கடன்கள் அல்லாமல் சிறு மற்றும் குறு தொழில் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப முத்ரா மற்றும் ஸ்டேண்ட் அப் இந்தியா திட்டங்களில் கீழ் கடனுதவிக்கும் முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது, இதற்காகவே ‘எஸ்எம்இ 300’ என்கிற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்று சென்னை மண்டல முதன்மை மேலாளர் ஜே.மோகன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT