பொதுத்துறையை சேர்ந்த மிகப்பெரிய பொதுக் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் வரும் அக்டோபரில் ஐபிஓ வெளியிடும் என்று நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசின் அனுமதி எந்த நேரத்திலும் கிடைக்கும் என்றும் அதற்கேற்ப பொதுப்பங்கு வெளியீடு இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அரசின் அனுமதி எந்த நேரத்திலும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி கூறினார். நடப்பு நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ.72,500 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. இதில் ரூ.11,000 கோடி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக திரட்ட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஐபிஓ-வுக்கான பணிகளை தொடங்கி உள்ளது. நிதிச் சேவை துறை, ஐஆர்டிஏ உள்ளிட்ட அரசு துறைகளிடம் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். நடப்பு நிதி ஆண்டுக்குள் ஐபிஓ வெளியாகும் என அதன் தலைவர் சனந்த் குமார் தெரிவித்தார்.