உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ கார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2005-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை எம்ஏஎன் டிரக் அண்ட் பஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
1993-ம் ஆண்டிலிருந்து 1996-ம் ஆண்டு வரை ஸ்கானியா குழுமத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
ஸ்டாக்ஹோம் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்.
வால்வோ கார் பெல்ஜியம் நிறுவனத்திற்கு தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
சினோடிரக் நிறுவனத்தில் பொறுப்புகள் அல்லாத இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
பெரோஸ்டால் டிரக்ஸ் அண்ட் பஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உறுப்பினராக இருந்தவர்.
வால்வோ கார் குழுமத்தில் இயக்குநர் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.