வணிகம்

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் சஹாரா லைப் இன்ஷுரன்ஸ்நிறுவனத்தை வாங்க திட்டம்

செய்திப்பிரிவு

சஹாரா லைப் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தை வாங்க ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. சஹாரா லைப் நிறுவனம் ரூ.900 கோடி அளவுக்கு பாலிசிதாரர்களின் தொகையை கையாளுகிறது. பாலிசிதாரர்களின் நலனுக்காக கடந்த வாரம் சஹாரா லைப் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் எடுத்துக்கொண்டது.

பாலிசிதாரர்களுக்கு கொடுக்கவேண்டிய தொகை மற்றும் சஹாரா லைப் நிறுவனத்தின் சொத்துகளை வாங்குவதற்கு விரும்புவதாக பங்குச் சந்தைக்கு எழுதிய கடிதத்தில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஜூன் 12-ம் தேதி சஹாரா லைப் நிறுவனத்தை நிர்வகிக்க ஐஆர்டிஏஐ பொதுமேலாளர் ஒருவரை நியமனம் செய்தது. நடப்பு நிதி ஆண்டில் 665 பாலிசிகளை (ரூ.1.53 கோடி பிரீமியம்) இந்த நிறுவனம் விற்றிருக்கிறது. 2016-17-ம் நிதி ஆண்டில் ரூ.44.68 கோடி பிரீமியம் வசூல் செய்திருக்கிறது.

SCROLL FOR NEXT